பச்ச மண்ணும் சுட்ட மண்ணும்
பச்ச மண்ணும் சுட்ட மண்ணும்
ஒட்டாது
பட்டு போன உறவெல்லாம்
இனி பூக்காது
கொட்டி வச்ச பாசமெல்லாம்
இப்ப வேசமாச்சு
பெத்தவங்க வாழ்ந்த காலம்
நாமும் நடிச்சாச்சு
சொத்து இருந்தா குடும்பத்துல
வரும் வெட்டு குத்து
விட்டு கொடுத்து நாம் வாழ்வது
என்பதும் இனி நடக்காது
சோறு போடாத பிள்ளையானாலும் பெத்தவ
மகன்னு தான் சொல்லுவா
கொடுக்குற மகன் குணம் சரி இல்லையா
அவனையும் சொல்லி தான் காட்டுவா
பெரிய குடும்பம் பாசம் இருக்குமுன்னு
நினைக்கிறது நம்ம தப்பு
சிறிய குடும்பத்துல பாசம் இருக்கும்
ஆனா வேசமா இருக்காது
குணம் கெட்டவனிடம் பணம் கொண்டு
நல்ல மனங்கள் உடையும்
இதை இனம் கண்டு குணம் அறிந்து
பலர் பிழைக்கும் நிலையும் உண்டு
சொந்த புத்தி சுயமா நாம சிந்திக்கணும்
பிறர் சொல்லி கேட்கிறதை விட்டுறணும்
தூரமான உறவுக்கு என்றும் ஆயுள் உண்டு
கிட்ட வந்தா முட்டி நின்னு பகையாகும்
மனிதனை தெரிய மனதை புரிய நமக்கு
இறைவன் காட்டுவான் பாசக் கணக்கு
மாற்றமும் ஏற்றமும் அவன் மாற்றி தருவான்
மாசற்ற வாழ்க்கையை அமைத்து தருவான்
பச்ச மண்ணும் சுட்ட மண்ணும்
ஒரு நாளும் ஒட்டவே ஒட்டாது !
ஸ்ரீவை. காதர்