கோடீஸ்வரன் யார்
உலகை ஆளும் வல்லோன்
இறைவன் கோடீஸ்வரன் !
அவன் அற்ப படைப்பு மனிதன்
உலகில் கோடீஸ்வரனா ?
இறைவன் கொடுக்க நினைத்தால்
யாராலும் தடுக்க முடியாது
அவன் தடுக்க நினைத்தால்
யாராலும் கொடுக்க முடியாது
இதையும் மீறி உலகில் மனிதன்
தனக்கு தானே பட்டம் சூடி
நிலக்கிழார்,பண்ணையார்,நாட்டாமை
கோடீஸ்வரன்,செல்வந்தன் என்று
பிறக்கும் போது கொண்டு வந்ததா
இறக்கும் போது கொண்டு செல்வதா !
பிறந்த நேரம் பிச்சைக்காரன்
இறக்கும் போது செல்வந்தன்
வாழ்ந்த போதே வளமோடு
இறக்கும் போது இல்லாமை
இறைவனின் நாடினால் நடக்குமே
அன்றி மனிதனால் நடவாது ஏதும்
வீண் பெருமை ,விஞ்சிய தலை கணம்
மனிதனை மாற்றி விடும்
வாழ்வோம் நல்ல மனிதனாக
விரட்டுவோம் நாம் மமதையை
துனியாவின் வாழ்வோ அற்பம்
மறுமை வாழ்வே நமக்கு சொர்க்கம் !
ஸ்ரீவை.காதர்.