எங்கு பிறந்தாயோ , யாரு உன் தாயோ - வினோதன்

எங்கு பிறந்தாயோ
எங்கு வளர்ந்தாயோ - எனப்
பார்த்து வாங்கலையே
நேரம் கொடுக்காம
ஒட்டிகிட்ட - என்ன
ஒட்டிக் கொன்னுபுட்ட !

எம்மேல வளர்ந்தும்
நன்றிகள் ஏதுமின்றி
கடிச்சு வச்ச - என்
வெப்பநிலை கூட்டிபுட்ட
உன் கோரப்பல் காட்டிபுட்ட !

மருத்துவர கண்டவுடன்
மயங்கியபடி நடிச்சு - பின்
மருவொடு வந்துபோற
மறுவீடு வர்றாபோல - என்
உயிரருந்தி விருந்தாக்கவே !

மூக்கு நீரருவி - கொட
கொடனு கொட்டயில்ல
காவிரியா இருந்ததெல்லாம்
கங்கையா மாறிபோச்சு !

நாக்கு தொண்டையெல்லாம்
தட தடன்னு ஆடுனப்போ,
சஹானாவா இருந்ததெல்லாம்
சகாராவா ஆகிபோச்சு !

வெள்ள புளுக்கயெல்லாம்
வேலைக்கு ஆகலையே,
ஆவி புடிச்சும் - நாடி
மாறலையே, ஆறலையே !

சுவை செடியெல்லாம்
சுவடின்றி செத்துபோச்சே,
நாக்கு வக்கனைக
நமத்துதான் போச்சுபோல !

என்னமோ பண்ணுது
என்னனு தெரியயில்ல,
கண்ணுசெடி கலங்குதே
நெஞ்சுசெடி கருகுதே !

ரசமா கொடுக்குறாங்க...
நாசமத்து போறவனே
எங்கயாவது போகாம
என்னவந்து ஏன் கடிச்ச ?

வாடகையே குடுக்காம
பால் காச்சி வந்து புட்ட,
மூக்கால அழுகுறனே
இறங்கித்தான் போய் தொலையேன் !

எட்டு மூளையும்
கடிச்சாலும் - என்
மூளைய விட்டுவை,
வலிதாங்க முடியல - உன்
வாயகொஞ்சம் மூடிவை !

சனிப்பய சாவகாசம்
கொடுப்பானே - இந்த
சலிப்பய சாகடிகிறானே
அவகாசம் கொடுக்காம !

வெள்ள உடுத்திய
பருத்தி வீரனெல்லாம்
வெலக்கமாத்தோட காத்து
கிடக்காக - கொஞ்சம் பொறு
உன் வாய வசமா கிழிப்பாக !

உன்ன கெஞ்சி கேட்டுகிறேன்
என்னோட விட்டுட்டு - உன்
வீட்டுக்கு போய் தொல - இல்ல
செத்து ஒழிஞ்சு போ - என்மேல
பாய்ஞ்ச மாதிரி - பாய்ஞ்சு
போயிடாத - யாரையும்
பாடா படுத்தாத, படுக்காத !

கண்ணுக்கே தெரியல
அதுனால தப்பிச்ச - எங்கம்மா
கண்டுச்சு - உன்ன பிச்சே
கொன்னு போடும் - கண்ண
நோண்டி தின்னு போடும் !

எலேய் வைரசு - என்
உடம்பவிட்டு ஓடிப்போ,
உன் புள்ள குட்டியெல்லாம்
ரெண்டா, நாலா பொழைச்சு
கெடக்கும் - ஒம் பரம்பரைய
கொன்னபாவம் எனக்கு வேணாம் !

(காய்ச்சல் பரப்பும் வைரஸ் கிருமிகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன், மூணு நாலா...காய்ச்சல்....ஆஆவ்வ்வ் )

எழுதியவர் : வினோதன் (2-Jan-14, 9:13 pm)
பார்வை : 119

மேலே