வீதியோரத்தில் நிற்கிறேன்
வீதி ஓரத்தில்
தனிமையில் நிற்கிறேன்
என்னை தொடர்ந்து
செல்பவர்கள்
சிலபேர் - என்னை
கடந்து செல்பவர்கள்
பலபேர்...
எல்லோரும்
என்னை
கண்டுகொள்வதில்லை
என் உள்ளத்தை
புரிந்து கொண்டதும்
இல்லை..!
பலநேரம்
நிழல் குடையாய்
நிற்கிறேன்
நிழல்
அற்றவனாக...!
என்னை
தேடிவரும்
குயிலுக்கு இடம்
அழிக்கிறேன்...
என்னை
நாடிவரும்
பறவைக்கு கிளை
கொடுக்கிறேன்...
என் சுக
துக்கங்களை
மறந்து சிலை
போல் நிற்கிறேன்
வீதியோரத்தில்
மரமாக..