எங்கே போகிறது இந்த மனம்
தேடுகிறது இந்த மனது
எங்கும் இருக்கின்ற ஒன்றை..
தென்பட்டாலும்
ஏனோ கானல்போல் மறைகிறது..
ஓடுகிறது இந்த வாழ்க்கை
தெரிந்த இலக்கை நாடாமல்
கிடைப்பதை எல்லாம் முடிந்தவரை
எதற்க்கெனத் தெரியாமல் வாரிக்கொண்டு..
விதி தேடி கிடைக்கவில்லை
கிடைத்தால் அதன் மொழிதான் புரிந்திடுமா..
மதி வெல்லத் துணிவதில்லை
துணிந்தால் அதுவும் விதி வழியா..
எல்லை இல்லா இவ்வுலகை
ஒரு எடை கொண்டு அளக்க முடியாமல்..
தானும் எல்லையற்று போகிறதோ
ஒரு எல்லைக்குள் இருக்கும் இந்த மனம்..