அகில கோடி பிரமாண்டமாக

அதி காலையிலே
விடியும் நேரத்திலே
கா கா என்று
காகம் கரைய
ட்வீட் ட்வீட் என்று
குருவிகள் கூவ
வீடுகள் விழிப்பு காண
கதிரவன் மெல்ல
புவியில் நுழைய
ஒரு பக்கத்தில்
உலகம் துயில் கொள்ள
மறு பக்கத்தில்
கண்ணைக் கசக்கிக்
சோம்பல் முறித்துக் கொண்டு எழ
இந்த மகா இயக்கம்
மீண்டும் தொடர
இயற்கையும் மனிதனும்
பின்னி பிணைந்து
வாழும் காலம்
அழகான காட்சியாக விரிய
எந்நேரமும் இவ்வியக்கம்
எதற்கும் எ ன்ன காரணத்துக்கும்
மழை, புயல், பேரலை
போன்ற சீற்றங்களுக்கு
அடி பணி யாமல்
சுற்றிக் கொண்டே இருக்கும்
நேர்த்தி பிரமிப்புட்ட
அகில கோடி பிரமாண்டத்தை
நோக்கி மலைத்து நிற்கிறேன்
ஒரு சிறு குறி யிடாக !

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (2-Jan-14, 10:35 pm)
பார்வை : 439

மேலே