சொற்களில் வடிக்க இயலாமல்
சாரல் மழை
சன்னலோரத்தில்
சொட்டு சொட்டாக
விழுந்து தெறிக்க
சுகமான தென்றல்
சாளரம் வழியே
சொகுசாக
சடுதியில் நுழைய
மேகக் கூட்டங்கள்
பரந்த விரிந்த வானில்
அலை அலையாக
வெளியே தோன்ற
அறையின் ஓரத்திலே
தனிமையில் அமர்ந்து
எழிலைக் கண்டு
மயங்கி நிற்கிறேன் .
இனிமையான இயற்கை
நல்கும் இன்பம்
மனத்தைக் கொள்ளை கொள்ள
சொற்களில் வடிக்க இயலாமல்
திக்கு முக்காடி நிற்கிறேன்.