புதிய பாதை-கே-எஸ்-கலை

சோறூட்டும் போது
குழந்தைக்கு - நிலாவைப்
பிடித்து தருவதாய்ப்
பொய் சொன்னேன்...

இதோ...என்
ஏழைக் குழந்தையின்
கன்னத்தை வருடிக்கொண்டிருகிறது
நிலா !

=======

வெகுநேரமாய்ப் பயணித்து
வானத்தை தொட
கையை நீட்டினேன்...

யாரோ கையை தட்டிவிட்டார்கள்....

மனைவியின் கையிலிருந்த
தேநீரை ருசித்துக் கொண்டு
திரும்பிப் பார்த்தேன்....
வானத்தைக் காணவில்லை !!

=======

எல்லா சாளரங்களையும்
திரையிட்டு மூடிவிட்டு
சாளரங்களையே
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
திரையில் !

======

எதிர்காலம் என்று
நினைத்த
நொடிகளையெல்லாம்
கொன்றிருந்தது
சற்று முன் நினைத்த
எதிர்காலம்
========

எழுதியவர் : கே.எஸ்.கலை (3-Jan-14, 1:03 am)
பார்வை : 275

மேலே