ஏமாற்றம்
ஏமாற்றம்தான் உன்னை காதலித்த நாள்முதலாய் விரும்புவது போல் நடிப்பதும் நல்லவள்போல் வேசம் போடுவதும் நெருங்கி வந்து சில்லரையை சிந்தியதுபோல் புன்னகைப்பதும
நானில்லை எனில் வேதனையில் தவிப்பதுபோல் உன் கைபேசி எண்ணுக்கு சோகத்தோடு கீதங்களை வைத்து உன்னை அழைக்கும் போதெல்லாம் என் நெஞ்சில் நீங்காத இடம்பெற நீ செய்யும் பாசாங்கும் என்னை உண்மையாக எண்ணி அழவைத்தது உன்மேல் அளவில்லா அன்பினை வைக்கத் தூண்டியது
நான்நடக்கும் பாதசுவடுகளில் உன் பாதங்களை வைத்து நடப்பதும் என் இதயத்தில் வில்அம்புபோல் குத்திநின்றது என்றும் உன் நினைவுகளால் மாறி
நீ நடத்தும் காதல் நாடகத்தைதான் இதுவரை புரியாமல் போனது வெறுத்துவிட்டு சென்ற நொடிதான் உணர்ந்தேன் நீ!
தந்தது
ஏமாற்றம்தான் என்று........!!!