எங்கே எனது கவிதை
என் வீட்டுத் தோட்டத்தின்
பூக்கள் எல்லாம்
களவு போயின ..
அன்றொருநாள் !
மலர்க்குவியல்களுக்கு உள்ளிருந்து
எழுந்திருக்கிறாய் நீ மெதுவாய் !..
உன் பெயர் சொல்லிப்
பறிக்கிறேன் ,
சிரித்துக் கொண்டே
விடைபெறுகின்றன ..
ரோஜாக்கள் செடிகளிலிருந்து !
செவ்விதழ் விரித்துச்
சிரிக்கின்றாய் நீ !சட்
சட்டென்று தன்
பட்டு இதழ்களை
உதிர்த்துவிடுகிறது
இறுமாப்புடன் இருந்த
இளஞ்சிவப்பு வண்ண ரோஜா ஒன்று !..
உன் ஸ்பரிசம்
பட்டிருக்கும் என
நினைக்கிறேன் நான் ,
வாடாமல்லியைப்
பாக்கும்போதெல்லாம் !
சீக்கிரம் வருவாய்
பெண்ணே !
நான் சருகாவதற்குள் ..
என் குறிஞ்சி மலராய் !..

