நிலவும், சோறும், ஞானமும்

நிலவைக் காட்டினாள் தாய்
சோறு ஊட்டும் போது
நிலாவை பார்த்த மகனிடம்
பாடினால் இராகத்துடன்

வெண்மையான நிலாவே
பஞ்சை விட இலகுவான நிலவே
இரவில் எட்டிப் பார்க்கும் சந்திரனே
குளுமை படர் தெறிக்கும் சுடரே.

வட்ட வடிவமான் பிறையே
பாதி நாட்கள் தேய்ந்து மறைந்து
பாதி நாட்கள் தோன்றி வளர்ந்து
வித்தை காட்டும் வெண்ணிலாவே.


அதில் மலை தெரிகிறதா பார்
தெரியும் நீர் திவிலையை உற்றுப் பார்.
செடி கொடிகள் தென் படுகிறதா கவனி
.உயிரினத்தைக் காண முடிகிறதா நோக்குங்கால்


சோறு ஊட்டும் போது தாய் பச்சிளம் பாலகனுக்கு
நிலவின் அழகை வர்ணித்து மகிழ்கிறாள்
அதன் வடிவத்தை சிலாகித்து பாடுகிறாள்
நிலவு சார்ந்த அறிவியலையும் இயம்புகிறாள்
சோறும் உள்ளே செல்கிறது அதனுடன் ஞானமும .

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (4-Jan-14, 10:16 am)
பார்வை : 717

மேலே