அரசியல் வியாபாரம்
அரசியல் வியாபாரம்
முகம் நிறைய சிரிப்பு
அகம் நிறைய அழுக்கு
வார்த்தை வித்தைகளில்
வீழ்கிறது வாக்கு மழை .........
கொடுத்த வாக்குகள் எல்லாம்
பெற்ற வாக்குகளோடு மறந்துவிட
மைவித்தை காட்டி மறைகிறது
ஒவ்வொரு தேர்தலும் .........
அளிக்கின்ற வாக்கோடு
ஐந்து வருடங்களுக்கு
அடமானமாய் போகிறது
அரசாங்க சிம்மாசனம் .........
பிட்சைக்கரானாய் வந்தவனெல்லாம்
கோடீஸ்வரர்களாய் ஆகிறான்
ஒட்டு போட்ட மக்கள்மட்டும்
ஒட்டாண்டிகளாய் போகிறான் ........
அடிப்படை தகுதி இல்லாத
அரசியல் தொழில்
ஒருபைசா முதலுக்கு
ஒருகோடி வசூல் .......
பதவிகளுக்காக பாவங்கள்
துணைபோகின்றன
அடிக்கடி தர்மம்
தலைமறைவாகி விடுகிறது .......
ஏமாற்றுதலே அரசியல் சூட்சமம்
ஏமாறுதல் இங்கே இலவசம்
விரல்விட்டு என்ன தெரியாதவனுக்கு
விரல் காட்டும் இடமெல்லாம் சொத்து .....
பொதுநலம் இல்லாத
சுயநல சந்தை
இந்த அரசியல் சந்தை ,
இது ஒரு வியாபார சந்தை !