மூன்றாம் பால்–கே-எஸ்-கலை
நெளிந்து வளைந்து
நின்றுக் கொண்டிருந்த
மெழுகு...
கருப்பு தாளில்
மஞ்சள் கதை
எழுதிக்கொண்டிருகிறது...
அந்தக் கதையில்....
ரேகைகள்
பரஸ்பரம் இடம்மாறி
ஆதியையோ
அந்தத்தையோ தேட...
சந்தம் பிறழ்ந்த
சங்கீதம்
சொந்தம் கொண்டாடுகிறது
ஐந்தடி மூன்றங்குல
வீணையில் !
பக்கங்களின்
இடைநடுவில் பற்பல
நவீன ஓவியங்கள்...
கருப்பு தாளில்
கருப்பு மையாலேயே
வரையப் பட்டிருந்தது...
அத்தனைச் சித்திரங்களும்
டாவின்சியை
தோற்கடித்திருந்தது......