இயற்கை காதலன்

பனி போர்த்தினாலும், உறங்கா மரங்கள் எங்கள் காட்டில்.

நிசப்தம் மிகுந்த காட்டில், வெள்ளிக்கம்பி மட்டும் யாழ் மீட்டும்.

இன்று விட்ட மொட்டு, தென்றலின் பாதையை காட்டும்.

புலனின்றி மிதந்து வரும் தென்றலை பூப்பாதை வரவேற்கும்.

ராகம் தேடிப் பாடும் குயிலின் ஓசை, பாசி பாறையில் தெறிக்கும்.

யாழின் இசையில், குயில் பாட
தென்றலின் தாளத்துடன் நாணலின் அரங்கேற்றம் ஆரம்பம்.

இறக்கை தட்டி ஆர்பரிக்கும் பட்டாம்பூச்சிற்கு,
மகரந்தத்தால் தேன் விருந்து
இசை விருந்தாக காத்திருக்கும்...

எழுதியவர் : பூபாலன் (5-Jan-14, 6:43 pm)
Tanglish : iyarkai kaadhalan
பார்வை : 147

மேலே