விலைமாது

வறுமையின் எதிரி நான்
விலைமாது விடுத்த
இரு கோரிக்கை :
என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.
என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது...

எழுதியவர் : (6-Jan-14, 7:51 am)
பார்வை : 81

மேலே