தாள் திறவாய் பேரெழிலே

வானத்து தாரகைகள்
மௌனத்தில் சிந்திய
ஒளிப் பொழிவில்
ஒரு வசந்தத்தின் இரவில்
நெஞ்சத்தில் பூத்தவைகள்
நினைவெல்லாம்
மலர்ந்து சிரிப்பவைகள்
உன் இதய வாசலுக்கு
எடுத்து வந்தேன்
தாள் திறவாய் பேரெழிலே !

குளிர்ப் பனிக் காலத்திலே
குயிலும் கூவாத வேளையிலே
இளவேனிலே வ்ரிந்திருக்கும் நெஞ்சினிலே
மௌனக் குயிலை இசைக்க வைத்து
அந்த இசைப் பாடல்களை
உன் இதய வாசலுக்கு
எடுத்து வந்தேன்
தாள் திறவாய் பேரெழிலே !

புரிந்திடும் புன்னகையில் மௌனமாய்
புது மலர் பூங் கொத்தாய்
கவிந்த ஒரு மாலையில் அறிமுக மானாய்
நீ நெஞ்சில் எழுதிய வரிகளை தாங்கிய
ஒரு கவிதைப் புத்தகமாய்
உன் இதய வாசலில் நிற்கிறேன்
தாள் திறவாய் பேரெழிலே !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jan-14, 10:34 pm)
பார்வை : 99

மேலே