அம்மான சும்மாவா
அம்மா.,
-------
நெஞ்சினில் நீ
பிஞ்சாய் இருந்த போது அமிர்தம் ஊட்டினாய்
அன்பை விதைத்தாய்...
என்னை வளர்க்க ஆலமரமாய் நீ
இளமை என்னை தழுவிய போது
மோகம் உன்னை மறைத்தது
மடி சாய மாற்று இடம் கிடைத்தது
அப்போது நீ தந்த அமிர்தமெல்லாம்
நஞ்சாய் மாறியதம்மா...
இப்போது எனக்கு நீ வாழை மரம்
எல்லாம் மாறிடவே
உன் நினைவு மட்டும் நெஞ்சினில் கிடந்து தவிக்குதம்மா...
உன்னோடு மட்டும் என் வாழ்க்கை இருந்திருந்தால்
எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்
இருதலை கொள்ளியாய் தவிக்ககிறேனே!!
கசப்பையும் இனிப்பையும் இரு கைகளில்
தவிக்கும் தவிப்பை நீ அறிவாய் அம்மா