தங்க அரண்மனை
ஒருநாள் இரவு.
மூக்கு முட்ட குடித்து விட்டு தள்ளாடியபடிக்கி வந்து வீட்டின் கதவுகளைத்தட்ட, மிக கோபத்துடன் வந்து கதவைத் திறந்த மனைவி,
"எங்கு கிடந்தீர்கள் இவ்வளவு நேரம்" என்று வினவ கணவன்,
"புதிதாகத் திறந்திருக்கும் "தங்க அரண்மனை" என்று பெயரிட்டிருக்கும் மதுவகம் சென்றிருந்த தாகக் கூறி, அங்கு கதவுகள், அனைத்தும் பொன்னால் செய்யப்பட்டிருப்பதாகவும், நிலத்தில் தங்கத் தகடுகள் போட்டிருப்பதாகவும், அதுமட்டுமின்றி கழிப்பறையில் "கம்மோடு"களும் பொன்னால் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்கிறான்.
போதையில் உளறுகிறான் கணவன் என்று நினைத்த அவள், மறுதினம் கூகுளே சர்ச் செய்து பார்க்க, அந்த மதுவகத்தின் தொலைபேசி எண் கிடைக்க, மதுவகத்தில் சேவை செய்யும் நபருடன் பேசுகிறாள்.
ஹலோ .. தங்க அரண்மனை மதுவகமா"
ஆம். மேடம்
உங்கள் மதுவகத்தில் கதவுகள் பொன்னால் செய்யப்பட்டவையா
ஆம். மேடம்.
தரையே தெரியாதபடி தங்கத் தகடுகள் போட்டிருக் கிறீர்களா
ஆமாம் . மேடம்
அவளுக்கு ஒரே ஆச்சரியம். இப்படியும் ஒரு மதுவகமிருக்க முடியுமா என்று. இருப்பினும், அவள் தொடர்ந்தாள்.
அதுசரி .. கழிப்பறையில் "கம்மோடு"களும் கூட பொன்னால் செய்யப்பட்டதா ? என்று கேட்டதும் திடுக்கிட்ட அந்த நபர், சற்று நேரம் யோசித்து விட்டு
"டேய் .. நேற்றிரவு சேக்ஸாபோனில் ஒன்னுக்குப்போன ஆளு யாருன்னு தெரிஞ்சு போச்சுடா" ன்னு
உரத்த குரலில் சொல்வது அவள் செவிகளில் கணீரெனக் கேட்டது.