எதை விடுவது

விட்டு கொடுப்பது காதல்
விட்டு ஒழிப்பது வெறுப்பு
விட்டு பிடிப்பது உறவு
விட்டு கொடுக்காதது உடன் பிறப்பு
விட்டால் பிடிக்க முடியாதது நல் நட்பு !

விட்டு துடிப்பது இதயம்
விட்டு ஒழிப்பது தீய பழக்கம்
விட்டு பிடிப்பது மனசு
விட்டு கொடுக்காதது தன்மானம்
விட்டால் பிடிக்க முடியாதது உயிர்....!

விட்டு விட்டு அடிப்பது அலை
விட்டு பிடிப்பது ஒரு கலை
விட்டு கொடுக்காதது பிழை
விட விட்டால் தப்பாது தலை

எழுதியவர் : kanagarathinam (7-Jan-14, 11:47 pm)
Tanglish : ethai viduvathu
பார்வை : 102

சிறந்த கவிதைகள்

மேலே