அழகு பதுமை

ஒற்றை பின்னல் ஜடையழகு ஒட்டிவைத்த நெற்றி பொட்டழகு ஓரவிழி கண் மையழகு ஒப்பி குழிவிழுந்த கண்ணமழகு ஒட்டுகின்ற செர்ரி உதட்டழகு ஒளிர்கின்ற சிறைபிடிக்கும் சிரிப்பழகு
ஓய்வின்றி மயக்கும் பேச்சழகு ஒடுங்கிய சங்கு கழுத்தழகு
ஓங்கி முன்நிற்கும் மார்பழகு
ஒட்டியான் தவழும் இடையழகு ஒல்லியான பளிங்கு தொடையழகு
ஓடுகின்ற புள்ளிமான் காலழகு ஒய்யார அன்ன நடையழகு

எழுதியவர் : மோகன் சுப்பிரமணியன் (8-Jan-14, 12:07 am)
சேர்த்தது : mohan subramanian
பார்வை : 696

மேலே