மனதொடிந்தேன்
கல்லொன்றைக் கண்டேன்,
சிலையாக மாறியது!
மரமொன்றைக் கண்டேன்,
கனிதந்து உதவியது!
சூரியனைக் கண்டேன்,
ஒளிதந்து நடத்தியது!
மதியதனைக் கண்டேன்,
மதி மயங்கச் செய்தது!
மலரொன்றைக் கண்டேன்,
மணம் பரப்பச் செய்தது!
மழைத் துளிகளைக் கண்டேன்,
மண் செழிக்கச் செய்தது!
வயல் வெளியைக் கண்டேன்,
வயிறு நிரம்பச் செய்தது!
நீர் நிலைகளைக் கண்டேன்,
தாகம் தணியச் செய்தது!
கடலதனைக் கண்டேன்,
காவியங்கள் படைத்தது!
தென்றலைக் கண்டேன்,
தெம்மாங்கு பாடியது!
புயலைக் கண்டேன்,
புரட்சியொன்று செய்தது!
பூகம்பங்கள் கண்டேன்,
புதுமைகள் செய்தது!
மனிதனைக் கண்டேன்,
மனதொடிந்து போனது!
.......................சஹானா தாஸ்
......(இந்தப் படம் என் கை விரல்களில் தூரிகையின் வர்ண ஜாலம்)