மகரந்தம் இல்லா மலர் அவள் -- கண்ணன்
அவள் பார்த்தாள்
அவனும் பார்த்தான்..
அவள் புன்னகை பூத்தாள்
அவன் அதை புறக்கணித்தான்..
அவள் அருகினில் வந்தாள்
அவன் தலை குனிந்தான்..
அவளாக பேசினாள்
அவன் மௌனம் சுமந்தான்..
மறுபடியும் அவளே பேசினாள்
மௌனத்தின் சுமை கூடியது அவனுள்..
விரல் கொண்டு தீண்டினாள்
விரசம் கொண்டு அவன் நகர்ந்தான்..
மலர்ந்த புன்னகை சுருங்கியது..
அவள் கோபம் கொண்டாள்
அவன் மரம் போல் அமர்ந்திருந்தான்..
அவள் சலிப்புடன் புறப்பட்டாள்
அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..
அவள் சென்றபின்
பாவமென அவன் திரும்பிப் பார்த்தான்..
அவள் சோகத்தை மனதில் சுமந்து
அடுத்த புன்னகைக்குத் தயார் ஆகினாள்..!!
(தொடர் வண்டிப் பயணங்களில் அவ்வப்போது நிகழும் காட்சி)