கொஞ்சும் மனதை கொஞ்சம் கொடுங்கள்

மழை நீரே நன்றி
எனை வானம் தாண்ட வைத்தாய்...
தேங்கிய குட்டையில் கொசுக்குகளுக்குக் பதில்
மேகங்களின் உரையாடல்கள்
தெருநாயே நன்றி
எனை ஒலிம்பிக்கில் ஓட வைத்தாய்...
பயத்திலே அன்று ஓடியது தங்கப்
பதக்கத்தையே எனக்குத் தந்தது.....!
எனவே
வதைக்கின்ற நொடிகளை கொஞ்சம்
வாழ்க்கையில் படிக்கட்டுக்களாக்குவோம்...
வரவேற்பு மாலையை
வசந்த எதிர்காலம் தோளில் போடும்....
சகிப்புத் தன்மையும் சாதனையாகும் - நீங்கள்
சந்தோசிக்க மறப்பதே வேதனையாகும்....
ம்........
சிரிக்கத் தொடங்குங்கள்......
ஜெகம் ஜொலிக்கத் தொடங்கட்டும்......