அன்னை

இனம் மறக்க
மொழி மறக்க
என்னையும் நான் மறக்க
அன்னையே உன்னை மறவேன்
உன்னால் பிறந்தவன் நான்
உன்னால் வளர்ந்தவன் நான்
நீ கயிறாய் இருக்க அதைகொண்டு
பட்டமாய் பறந்தவன் நான்
நீ குளமாய் இருக்க அதில் நீந்தி
பலகாலம் விளையாடியவன் நான்
என்னக்கு ஒரு ஆசையடி
நீ உறங்க நான் தாலாட்ட வேண்டுமடி

எழுதியவர் : ஜானகிராம் (8-Jan-14, 11:02 am)
Tanglish : annai
பார்வை : 58

மேலே