இறப்பதற்குள்…

இறப்பதற்குள்…

உன்னை
முதன்முதலாய் பார்த்தது
ஒரு பேருந்து நிலையத்தில்...

எதிரெதிர் திசையில்
நின்றாலும்
ஒரே திசையில்
நம் பார்வைகள்,

இன்னொரு முறை
திரும்பிடமாட்டாயா?
ஏக்கத்தில் நானிருக்க,

உனக்கான பேருந்தை
தூரத்தில் கண்டவுடன்...
முதன்முதலாய்
கவலைகொண்டேன்
சரியான நேரத்தில்
பேருந்து வந்ததற்கு...

ஏறிச்சென்ற உன்னுடன்
என் இதயமும் வந்தது
உனக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை...

இன்னும்
காத்துக்கொண்டுதானிருக்கிறேன்...

நீ எடுத்துச்சென்ற இதயத்தை
திருப்பி கேட்டிட அல்ல,

இறப்பதற்குள்,
எப்படியாவது
உன்னை
இன்னொருமுறை
பார்த்திடமாட்டேனா என்று?...

எழுதியவர் : சிராஜ் (8-Jan-14, 4:33 pm)
பார்வை : 64

மேலே