ஈன்ற போழ்திலும் பெரிதுவந்தேன்

ஈன்ற போழ்தினும் பெருதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்.
ஈன்ற போழ்திலும் பெரிதுவந்தேன்...
கல்வியில் சிறந்தவனாம் என
கண்ட போது இணையத்தில்
கண்கள் பெருகிக் கரை புரண்டு
காவிரியாய் ஓடுதடா கண்மணியே
அள்ளி அணைத்து முத்தமிட
ஆசை நெஞ்சில் பொங்குதடா
தள்ளியிருக்கும் விதி கொண்டேன்
தாங்க முடியவில்லையடா..
ஈன்ற போழ்தில் பெரிதுவந்தேன்
சான்றோன் நீயெனக் கேட்டதாலே..
பேருவகை கொண்டு உன்னை
பெருமையோடு வாழ்த்துகிறேன்
பேரன் பெயர் சொல்பவனாய்
பெருமை பெற்று உயர்க நீயே..
கலையும் கல்வியும் வீரமும்
கண்ணென மானமும் பெற்று வாழ்க!
வாழ்க என் செல்வம் நீயே!
வளர்க என்றும் நற்றமிழில்!!!

எழுதியவர் : Akramshaaa (8-Jan-14, 8:20 pm)
பார்வை : 94

மேலே