செந்தமிழ் நேசம்

அப்பா கையில் கையை கோர்த்து
அழகாய் சுத்தினேன் ரங்க ராட்டு
ஆஹா ஆஹா அதுதான் சொர்க்கம்
ஆனந்த காற்றில் மேனியும் மிதக்கும்....!
அப்பா இல்லை அதற்கும் சேர்த்து
அரும்தமிழ் வந்தது கற்பனை கோர்த்து
அன்பாய் சிரித்தது என்னைப் பார்த்து
அகத்தை வெளுத்தது அழுக்கை தூர்த்து...!
சுத்துறேன் சுத்துறேன் கவிதைகளுக்குள்ளே
சுகமாய் தென்றல் வீசுது மனதில்.....
சும்மா இருக்கும் பொழுதுகள் கூட
சுற்றத்தோடு மகிழ்வதாய் செந்தமிழ் நேசம்...!!