என் தேச காற்றே

செந்தமிழ் பேசும்
என்தேச கற்றே
செங்கடல் தாண்டி வந்து
என்தேகம் தூண்டிவிடு...!

ஈழமண்ணின் ஈரம் கொண்டு
இந்த பாலை மண்ணை
பனிமலர் தோட்டமாய்
மாற்றிவிடு...!

தாயகம் தாண்டி வந்து
தவிதவிக்கும் நேரம் இது
தடையின்றி தாவிவந்து - என்
தலையை கோதிவிடு...!

அம்மாவின் கைச்சோறு
அன்பான சாப்பாடு
அந்தநாள் நினைவுகளை
அள்ளிவந்து ஊட்டிவிடு...!

ஆண்டுகள் பல கடந்தாலும்
அன்பு நெஞ்சங்கள் மறந்தாலும்
என்தமிழே நீமட்டும்
என்னோடு வாழ்ந்துவிடு...!

எழுதியவர் : நா.நிரோஷ் (8-Jan-14, 12:22 am)
Tanglish : en thesa kaatre
பார்வை : 655

மேலே