அம்மா எனக்காக
அன்பாய் கனிவாய் ஆதரவாய்
தந்தாயே இறைவா எனக்காய்
பூ இதழினும் மென்மை சுகமாய்
சுமந்தாள் அன்னையாய் என்னை
கருவறை இருள் நினைவில்லை
அம்மா முக ஒளி மறக்கவில்லை வளர்த்து விட்டதாய் நம்பித்தான்
கை பிரித்து சென்று விட்டீர்களே
இன்னும் தாயின் முந்தானைக்கு அழுவதை அறியாது போனீர்களே
பாதம் பதிக்கின்ற இடமெல்லாம்
உங்கள் சுவடுகளைத் தேடுகிறேன். கணவர் பிள்ளைகள் வரங்கலாய்
உங்கள் மனம் போல நிறைவாய்
உங்களைத் தவிரக் குறை ஏதும்
இல்லா வாழ்வுதனைப் பெற்றேன்
நீங்கள் செய்த புண்ணியம் தான்
வளம் பெற்று செழிப்புருகிறேன்
தாயே நன்றி சொல்லத் தருணம்
என்றுமே வரவேப் போவதில்லை
தவம் செய்தேக் காத்திருப்பேன்
மீண்டும் உங்களுக்கே மகளாக