நட்பு பொன்மொழிகள்

1. இன்பத்தை இரட்டித்து, துன்பத்தை பாதியாகக்
குறைப்பது நட்பு. - பிரான்சிஸ் பேகன்.

2. நட்பு கடவுள் அளித்த பரிசு, மனிதன் பெற்றுள்ள
வரங்களில் தலைசிறந்தது. - பெஞ்சமின் டிஸ்ரேலி

3. நட்பைக் கொடுத்துதான் நட்பைப் பெறமுடியும்.
- தாமஸ் வில்லியம்

4. பறவைக்கு ஒரு கூடு, சிலந்திக்கு ஒரு வலை, மனிதனுக்கு நட்பு. - வில்லியம் பிளேக்

5. எதிரியின் முத்தங்களைவிட, நண்பனின் அடிகள் சிறந்தவை. - தாமஸ் ஏ. பெக்கட்

6. ஒரு நண்பனுடன் உரையாடுவது, உரக்க சிந்திப்பதற்குச் சமம். - ஜோசப் அடிசன்

7. உன் உறவினரைத் தேர்ந்தெடுப்பது ஊழ்வினை,
நண்பனைத் தேர்ந்தெடுப்பது நீயே. -ஜேக் டெலீர்

8. மற்றவர்களுடன் நட்புடன் பழகுவது சிறந்தது. அதே நேரத்தில் உங்களுக்கு நீங்களே நண்பனாக நடந்து
கொள்வது சாலச்சிறந்தது. -ஹோனோர்

9. கண்ணீரைத் துடைப்பவன் நமது வாழ்வின் உற்ற
நண்பனன்று, நாம் கண்ணீர் விடாமல் பார்த்துக் கொள்பவனே உற்ற நண்பன். -எஃப்டி

10. நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது. ஆனால் உயிரைக் கொடுப்பதற்குத் தகுதியான நண்பன் கிடைப்பது அரிது. -கதே

எழுதியவர் : (9-Jan-14, 12:12 pm)
பார்வை : 343

மேலே