காதலென்னும் சோலையினில்36

நான் அப்பாவிடம் பேசாததுக்கெல்லாம் காரணம் இவள் தான் என்று கவிதா பக்கம் கையை நீட்டினான் ராஜா........


என்ன நானா!என்று ஆச்சரியமாய், கோவமாய் ஒன்றும் புரியாதவளாய் அவனை புருவம் உயர்த்திப்பார்த்தாள்.


பதிலுக்கு ராஜலெக்ஷ்மியும், அவளது அம்மாவும் என்ன? என்று கேட்டு விட்டு கவிதாவை பார்க்க அவள் எதுவும் தெரியவில்லை என்று மௌனமாய் பதிலளித்தாள்....


புரியும்படி பதில் சொல்லுங்கள் அண்ணா? என்று ராஜாலெக்ஷ்மி கேட்க!
அமைதியாய் பதிலளித்தான் ராஜா..............


நானும் கவிதாவும் பழகிய ஓரிரு நாட்களில் நான் வெளியூர் சென்றேன் business விஷயமாக..வந்ததும் கவிதாவுடனான உறவை அப்பாவிடம் சொல்லி திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற முடிவுடன்தான் இருந்தேன்.......


ஆனால் நான் அங்கிருந்து வருவதற்கு முன்னாலயே என்னிடம் கூட சொல்லாமல் நீங்களே தாராவுக்கும் எனக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தீர்கள்!!!!!!!


உண்மைதானே அம்மா? என்று தன் தாயிடம் போய் கேட்டான்?


ஆமா! என்று அவள் பதிலளித்ததும், சத்தமாக சொல்லுங்கள் அம்மா அவள் காதுகளுக்கு கேட்கும் படி என்று சொன்னான்.


அனைத்தையும் கவிதா வியப்புடன் தான் கேட்டுக்கொண்டிருந்தாள்.


சரிப்பா இதுக்கும் கவிதாவால் தான் அப்பாவிடம் திருமணத்தை பற்றி பேசமுடியவில்லை என்பதற்கும் என்னடா சம்பந்தம் என்று தாய் கேட்டாள்,,,,,,,


சம்பந்தம் இருக்குதும்மா நான் ஊருக்கு வந்த அதே நாள் திருமணம் என்று அறிந்ததும் அப்பாவை பார்த்து பேசுவதற்காக சென்றேன்..........


அப்பொழுது தாரா என்னை அழைத்து கவிதா என்னை தரகுறைவாய் பேசிவிட்டு சென்றாள் என்று கூறினாள் அதை நான் நம்பவில்லை உடனே நீங்கள் இந்த கல்யாணத்தை நிறுத்த நினைத்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று தாரா மிரட்டினாள்...........


இவள் தாராவிடம் போய் பேசாமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது தாரா என்னப்பற்றி இவளிடமும் இவளைப்பற்றி என்னிடமும் பொய் சொல்லிதந்த்ருக்கமாட்டாள் அல்லாவா? இதற்கு காரணம் இவள் தானே என்று மறுபடியும்.



இவ்ளோ நடந்திருக்கா என்று 3பேரும் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தனர் கவிதா வாய் பிளக்காத குறையாய் பார்த்தாள்.........


நான் தாராவின் பேச்சை மறுத்து அப்பாவிடம் பேச சென்றேன் அப்பொழுது அப்பாவுக்கு ஒரு அழைப்பு வந்தது அப்படியே நெஞ்சை பிடித்து விட்டு உட்கார்ந்து விட்டார்...........


காரணம் கேட்டு அழைப்பை எடுத்து பேசினேன் அப்பொழுதுதான் மேனேஜர் அனைத்து பணத்தையும் திருடி விட்டு நம் கம்பெனியை எதர் கம்பேனிக்கு விற்று விட்டு சென்றது புரிந்தது...............


இந்த கவலையில் அப்பா உயிருக்காக போராடி உயிரையும் விட்டு விட்டார்........


அம்மா அலுத்து கொண்டிருக்க கவிதாவும்,ராஜலெக்ஷ்மியும் தேற்றினார்கள், கவிதாவும் கூடவே அழுதுவிட்டாள்.........


ராஜா மறுபடியும் தொடர்ந்தான் அப்பா போன பிறகு நாம் எந்த வசதியும் இல்லாமல் தெருவில் நிற்கும் போது எப்படி அம்மா என் காதலை பற்றி உங்களிடம் சொல்லமுடியும் அதான் அனைத்தையும் எனக்குள் புதைத்து விட்டு அப்பாவின் இறுதி சடங்குகளை முடித்து விட்டு............


ஒருநாள் கவிதாவை பார்க்க அவள் ஊருக்கு சென்றேன் எவ்வளவோ விசாரிச்சேன் அவளை கண்டு பிடிக்கமுடியவில்லை இறுதியில் அவள் பக்கத்து வீட்டில் விசாரிக்கும் போது அவர்கள் உரை காலி செய்து போய் 20 நாட்கள் ஆகிவிட்டதே என்று சொன்னார்கள்...........


என் மனது வெடித்துப்போனது எல்லாம் என் விதி என்று தலையில் அடித்துக்கொண்டு தீவிரமாக உழைத்து வாழ்வில் முன்னேறிய பிறகு கவிதாவை எப்படியாவது கண்டுபிடித்துவிடலாம்! என்ற வெறியில் இரவு பகல் பாராமல் அயராது உழைத்து கம்பேனியை இவ்வளவு முன்னுக்கு கொண்டு வந்துள்ளேன் என்று சொல்லி ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டான்...............



கடைசியில் சொத்து, பேரு, பணக்கார அந்தஸ்து எல்லாம் வந்தது "என் செல்ல கவியை தவிர" என்று சொல்லி வருத்தப்பட்டான்.........


அதன் பிறகும் ஒரு மாதத்திற்கு ஒரு முறை கவியைத்தேடி அவள் ஊருக்கு செல்வேன் ஆனால் என் துரதிர்ஷ்டம் அவளை சந்திக்கமுடியவில்லை............


இப்பொழுது கடவுளே மனது வைத்து என் கடவுளை என்னிடம் சேர்த்துள்ளது என்று சொன்னதுதான் தாமதம் கவிதா ஓடி வந்து ராஜாவின் மார்பில் சாய்ந்து கொண்டாள்......................


இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருக்க வெளியில் ஒரு உருவம் இங்கு நடப்பது அத்தனையும் தனது கேமராவில் கவனித்துக்கொண்டிருப்பதை இவர்கள் யாரும் கவனிக்கவில்லை???????????????






தொடரும்..........

எழுதியவர் : (9-Jan-14, 12:47 pm)
பார்வை : 274

மேலே