யாரும் இங்கே மலடி இல்லை
உயிர் கொண்டு
யான் எழுதிய கவிதை. .
என் குழந்தை. . .
படிக்க வேண்டாம்
பார்த்தாலே பரவசம். . .
கவிதைக்கு அர்த்தமா. .
கவிதையின் கேள்விகளுக்கே
விடை தேடி நான். .
நிலவு
தூங்கி பார்க்கலாம் இனி. . .
பூக்கள்
சிரித்ததால் துள்ளி வந்த கனி. . .
யாரங்கே.!
மலடி என்ற சொல்லை
எடுங்கள்
இப்போதே அகராதியில் இருந்தே. .
ஆணோ பெண்ணோ
என் கவிதையைப் பார்க்கும்
எவருமே இனி மலடி இல்லை. . . . .