வேலை வேலை வேலை
குடும்ப வேலைகளை
குறிப்பறிந்து முடித்து
அவசர பயணம்
அலுவலக வாகனத்திற்காய்
வாகனத்திலும் விடவில்லை
வரிசையான வேலைகள்
கூந்தல் முடிவதிலும்
காலையுணவை கனவேகத்தில்
கச்சிதமாய் முடிப்பதிலும்
உதிரிப்பூக்களின் கால்களை
கயிற்றினில் கட்டி
கார்கூந்தல் ஏற்றுவதுமாய்
கரைகிறாள் தன்னுள்
அலுவலில் கரைந்தபின்
மாலை வேலைகளை
மனதில் சுமந்தபடி
வேலைக்காய் வாக்கப்பட்டவள்
விரைகிறாள் வீட்டிற்கு
தியாக செம்மலாய்..