செவ்வாய்க்குப் பொங்கி வா

காலனித்துவத்தால்
பாதணிக்கும் கீழ் போட்டு
மிதித்தவன் மீது
அணிதிரண்டே கொதித்தவன் தமிழன்!

கொப்பளித்த வார்த்தைகளாலும்
ஒற்றுமையின் சாட்டைகளாலும்
ஓடி ஒளிந்தவன் தானே ஆங்கிலேயன்!

இப்போதும் ஒன்றும் குறையவில்லை!
எப்போதும் எமக்கு சிறையே இல்லை !

((முந்தி வாடா தமிழா !
விண்ணுக்கு முன்னுக்கு புறப்பட -வாகை
ஏந்தி வாடா தமிழா!))

செவ்வாய்க் கிரகத்தை
ஆக்கிரமிக்கும் ஆங்கிலேயனால்
நாங்கள் தானே அக்கிரமப்படுவோம்

கிரகங்களிலாவது வேண்டாம் காலனித்துவம்
எட்டுத்திக்கும் பரந்து கிடந்தாலும்
ஒற்றுமைக்காய் பறந்து வரும்
தமிழர் பண்பின் தனித்தன்மையைக் காட்ட

வா தமிழா ! வா !

செவ்வாய்க்கு வழி சமைக்க வா!!!
புத்தாண்டில் ஒளியமைக்க வா!!!;
ஒற்றுமையாய் குடியமைப்போம் வா!!!

எழுதியவர் : (9-Jan-14, 7:32 pm)
சேர்த்தது : myimamdeen
பார்வை : 60

மேலே