தெருவோர தெய்வங்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
வீடு கட்ட
விண்ணப்பம் போட்டு
தெருவோரம் உறங்கும்
தெய்வங்கள் நாங்கள்
கழிவறை அழுக்கை
கிணற்றுக்குள் இறங்கி
சுத்தம் செய்வோம்
ஆனால்
கழிவறை அளவில் கூட
வீடின்றி தவிப்போம்
காலுக்கு செருப்பின்றி
தார் ரோடும் இடுவோம்
அது காய்கின்ற முன்னே
அதன் ஓரமாய் உறங்குவோம்
கடவுளின் கோவிலுக்கு
அனுமதி கிடைத்தும்
மழை வந்தால் மட்டும்
அதன் சன்னதிக்கும் போவோம்
உழைத்து மட்டும் வாழ்வோம் என்ற
வைராக்கியம் உண்டு
ஆனால் பிச்சைக்காரன்
பக்கத்தில்
உறங்கும் வாய்ப்பு மட்டும் உண்டு
குடி போதை
குடி மகன்களின்
வாகனங்கள்
வேக தடை
சில நேரம்
எங்கள் கால்கள் தான்
எறும்பு கூட
மழை காலம் பார்த்து
பொருள் சேர்த்து வைக்கும்
நாங்கள்
அரசாங்க வரி கட்டி
அதற்கும் வழி இல்லை
ஒட்டு போட நாங்கள் வேண்டும்
அடிமை வேலை செய்ய
நாங்கள் வேண்டும்
வரி பணமும் தர வேண்டும்
ஆனால் என் வீட்டு எண் என்று
எதாவது ஒரு மரம் தான்
கடவுளுக்கு கோவில் கட்டி
கலைத்த பின்பு சொல்லுங்கள்
காத்திருக்கும் எங்களுக்கும்
வீடு கட்ட சிந்தியுங்கள்
பெண் பிள்ளை என்றாலும்
தெருவோர வாழ்க்கை தான்
காம பிசாசு கண்களினால்
தினம் தோறும் தொல்லை தான்
தெருவோரம் வாழும்
எங்களுக்கு
சாதி மட்டும் ஒன்று தான்
அது அரசாங்கம் அங்கீகரிக்கா
ஏழை என்ற சாதி தான்
பெத்த பிள்ளை பைத்தியம்
என்று விரட்டி விடும்
பணக்காரர் மத்தியிலே
அவர் விரட்டி விட்ட
பிள்ளையையும் அரவணைக்கும்
நாங்களும் தெய்வங்கள் தான்
கூட்டு பறவையும்
நாங்களும் ஒன்று தான்
பகல் எல்லாம் உழைத்தாலும்
இரவு மட்டும் இடம் சேரும்
நாங்களும் பறவையும்
ஒன்று தான்
ஒன்றே ஒன்று
நாங்கள் கேட்க கேள்வி உண்டு
உங்கள் கழிவை கூட
சுத்தம் செய்ய நாங்கள் வேண்டும்
ஆனால்
எங்கள் சமூகம் மட்டும்
அசுத்தமாய் வாழ வேண்டும்
ஊராம் பிள்ளையை
ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானா வளரும்
ஆனால்
எங்கள் பிள்ளைகள்
என்று நல்லா வளரும்