வாழ்க்கை

எல்லாம் தொலைத்து
எதன் பின்னோ ஓடி
எங்கேதான் போகிறோம்?
எதிர்ப்படும் முகம் பாராமல்,
எண்ணங்களைப் பகிராமல்,
எண்ணற்றோருக்கு எதிரியாகி,
ஏகாந்தத்தில் மூழ்கித் திளைத்து
ஏமாற்றத்தோடு முடிவதா வாழ்க்கை?
என்றேனும் யோசித்து உணர்ந்து
எதார்த்தத்தோடு வாழ்வோமே.......

எழுதியவர் : சஹானா (9-Jan-14, 8:01 pm)
பார்வை : 175

மேலே