காதல் செய்யும் மாற்றம்
காதல் பிறக்கும் தருணம்
மண்ணில் மீண்டும் பிறந்தது போல் உணர்வாய்
உலகத்தை புதிதாய் ரசிப்பாய்...............!
காற்றில் ஓவியம் வரைவாய்
கானல்நீரில் உன் தாகத்தை தணிப்பாய்
பூக்களில் இருக்கும் தேனை சுவைப்பாய்
சிறகுகள் இல்லாமல் பாரந்திடுவாய் ............!
தனிமையில் தினம் பேசுவாய்
தனியாய் நீயும் சிரிப்பாய்
இரவில் துங்கிட தவிப்பாய்
தூக்கம் வராமல் துடிப்பாய்....................!
நீ பேசிடும் வார்த்தைகள் அழகாகும்
மொழியும் அதனால் சிறப்புறும்
காதலில் மெல்ல மனமும் கரையும்
கவிஞனாய் உன்னை மாற்றிடும்................!
கண்ணாடி முன்னாடி நின்று
தன் அழகை பார்த்து ரசித்து
தன்னை தானே மறந்திடுவாய்.................!
மனிதனை மனிதனாய் வாழ
மனதில் விதையாய் விழுந்து
பூக்களாய் புன்னகை செய்திடும்
மலர்கள் தான் காதல்.................!