தேர்தல் தூண்டில்

கரை வேட்டி சட்டையும்
கறுப்பு வெள்ளை
தொலைக் காட்சிப் பெட்டியும்
கேட்காமல் வந்தது
கொதிக்கும் உலைக்கு
கிள்ளிப் போட
நாலு அரிசிக்கு
கனவு காணும்
குடிசைகளின்
வாசலுக்கு!

எழுதியவர் : வளவன் (10-Jan-14, 8:01 am)
பார்வை : 62

மேலே