துக்கம்

அயலில் குடியிருக்கும்
மாடி வீட்டுக்காரர்
இறந்த போது
பலர் மண்ணில் புரண்டு
தேம்பித் தேம்பி
புலம்பினர்
காரணம் கேட்டேன்
கடைசியில் புரிந்தது
அவர்கள் யாவரும்
கந்து வட்டிக்கு
கடன் கொடுத்தவர்களாம்.

எழுதியவர் : வளவன் (10-Jan-14, 7:47 am)
சேர்த்தது : valavan2000
Tanglish : thukkam
பார்வை : 67

மேலே