valavan2000 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : valavan2000 |
இடம் | : Colombo |
பிறந்த தேதி | : 09-Aug-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 9 |
வாசகன்
வெண் பளிங்குப் பூக்கள்மணம் பரப்பி
இதழ் கருகி காணாமல் போகின்றன
கொழுத்தும் வெய்யிலுக்கும்
காயாத நீர்ச்சுனை
நெல்லும் அரிசியும்
உங்கள் மாடிகளில்
பதரும் உமியும்
எங்கள் குடிசைகளில்!
கரை வேட்டி சட்டையும்
கறுப்பு வெள்ளை
தொலைக் காட்சிப் பெட்டியும்
கேட்காமல் வந்தது
கொதிக்கும் உலைக்கு
கிள்ளிப் போட
நாலு அரிசிக்கு
கனவு காணும்
குடிசைகளின்
வாசலுக்கு!
அந்தி மழை மேகங்கள்
ஆர்ப்பரிக்கும் நேரம்
ஆளுயர நீர் மலைகள்
அசைந்து விளையாடும்.
சந்தமுடன் சிந்து தமிழ்
வந்து இசை பாடும்
சாரல் மலர் தூவும் மழை
ஜதியில் நடமாடும்.
சொந்தையிலே செவ்விளைகள்
துள்ளி விழும் போது
சித்தமெல்லாம் சில்லறைகள்
சிணுங்கும் ஒலி கேட்கும்.
முந்தி விழும் நீரின் துளி
மூக்கின் நுனி மோத
வந்து கரை சேரும் அலை
வழியில் படகோடும்
நொந்து தினம் மீன் வலித்து
நூலறுந்த வலையில்
வந்தமரும் நாரையினம்
வாய்க்கு இரை தேடும்.
வெந்து தினம் வீசும் வலை
வாழ்வின் விலை கூறும்
வந்து விழும் மீனின் சுமை
வயிற்றின் பசி ஆற்றும்.
அந்தரத்தில் தொங்குகின்ற
அவலம் எங
கோட்டுப் போட்ட மனிதக் குரங்குகளின்
கூச்சலில் குலை நடுங்கும்
மலைத் தோட்டத்துக்
குருவிகள்.
பதங்கமாகி நாற் புறமும்
நறுமணம் பரப்பி
பூத்துக் கருகும்
புனித கற்பூரங்கள்
கொழுந்து கிள்ளிய செடிகளாய்
வளர முடியாது வரையறைக்குள்
வாழ்வைத் திணித்த
தேய் பிறைகள்.
ஊரும் அட்டைகளும்
உயர் பதவி அட்டைகளும்-உயிர்
உறிஞ்ச ஒட்டி உலர்ந்த
குருதிக் கொடையாளிகள்.
பட்டம் படிப்பு பதவி
ஆசை இன்றி வெட்டவெளிக்
குளிரில்உறைந்து கிடக்கும்
மட்டம் பார்க்கும் கம்புகள்.
உழைப்புக்கு ஊதியம் கிடைக்காது
ஊனமுற்ற சுமைகளை
மானத்துடன் வாழ சுமக்கும்
இடைக் கூடைகள்.
உரிமைக்காக வாய் திறந்தா
வீட்டுக்குள் கள்வர் கூட்டம் இருக்க
வீதியில் போனவர் காலைக் கடித்தது நாய்!
வானத்து நிலாவை சிறை வைத்தேன்-
என் கிணற்றுக்குள்