கவலைய விடுங்க‌

'ரோகிணி நட்சத்திரத்துல குழந்தை பிறந்ததாலே, என் மச்சான்... அதாவது, குழந்தையோட தாய்மாமன், ரொம்ப, 'ஒரிடா' இருக்கான். ரோகிணி நட்சத்திரத்தில குழந்தை பிறந்தா, தாய்மாமனுக்கு டேஞ்சராமே...' என்றார்.

அருகே நின்று, ஸ்வீட்டை மென்று கொண் டிருந்த குப்பண்ணா, இடையில் புகுந்தார்...

'ரோகிணி நட்சத்திரத்துலே குழந்தை பிறந்தா, தாய் மாமனுக்கு ஆகாதுன்னு எல்லாரும் சொல்றது வாஸ்தவம்தான். ஆனா, அது தவறு. இதுக்கு உதாரணமா, பகவான் கிருஷ்ணனை சொல்லுவா... ஏன்னா, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த கிருஷ்ணன், தாய் மாமனாகிய கம்சனைக் கொன்னுட் டாங்கறதுனால தான்!

'கம்சன் கிருஷ்ணனுடைய தாய்மாமனே அல்ல.
'வட மதுரையை ஆண்ட உக்கிரசேனன் என்பவனுடைய மகன் கம்சன். உக்கிரசேனனு டைய தம்பி தேவகன். இந்த தேவகனுடைய மகள் தான் தேவகி. அதாவது, கம்சனுடைய சித்தப்பா பொண்ணு தான் தேவகி. அதனால, தேவகியோட மகனாகிய கிருஷ்ணனுக்கு, நேர் தாய்மாமா இல்லே கம்சன்; ஒண்ணு விட்ட தாய்மாமன் தான் கம்சன். அதனால, அம்பி... இந்த கதைய ஒம் மச்சான்ட்ட சொல்லி, 'ஒர்ரி' பண்ண வேண்டாம்ன்னு சொல்லி வை...' என்றார் குப்பண்ணா.

எழுதியவர் : படித்தது (10-Jan-14, 11:33 am)
பார்வை : 114

மேலே