பெண்ணின் நிலை

நான் உன்னை விட்டு விலகி சென்றபோது
நீயோ
என்னை நெருங்குவதிலே உறுதியாய் நின்றாய் !

ஆனால்,

இன்று, நான் உன் அருகிலிருக்கிறேன்

நீ என்னை விட்டு தள்ளி நிற்பதே சிறந்தது

என்கிறாய்!

பெண்கள் உங்களை விரும்பும் வரை

நீங்கள் அவர்களை விடுவதில்லை!

விரும்ப ஆரம்பிக்கும் போது அவர்களின்

இதயத்தை காயப்படுத்த ஆசைப்படுகிறீர்கள்

மறவாதீர் உங்களின் காயங்களுக்கு மருந்தாக

வரப்போவதும் ஒரு பெண்ணே என்று!

எழுதியவர் : இந்துமதிமோகன்ராஜ் (10-Jan-14, 1:06 pm)
சேர்த்தது : இந்துமதி
Tanglish : pennin nilai
பார்வை : 101

மேலே