அந்நியரைப் போற்றுவேன்

அந்நியரைப் போற்றுவேன்!
நம்மை அடிமைப் படுத்தியதற்காக அல்ல.
பலநாடுகளாய் சிதறுணடு கிடந்தநம்
துணைக் கண்டத்தை ஒருநாடாய் ஆக்கியதற்கு!
இந்தியா என்ற பெயர் வருவதற்கும்
அந்நியரே காரணம்; அதுதானே உண்மை!
பரதன் ஆண்டதாய்ச் சொல்வ தெல்லாம்
சான்றில்லாப் பழங்கதை புராணங்கள்போல்.
வடமொழி பாரசீகம் கலந்ததால் தான்
’இந்தி’எனும் ஒருமொழி உருவானது.
உருதுக்கும் இந்திக்கும் உள்ள தொடர்பு
உறுதிப் படுத்திடுமே இந்த உண்மையை.
வடநாட்டு இந்துப் பெண்களிடும் முக்காடும்
இசுலாமியப் பண்பாட்டு உறவுதானே.
பொதுமொழி ஏதுமின்றி இருந்த நமக்கு
ஆங்கிலம் வந்ததது நம் அருந்தவப் பயனே.
சாதிகள் பலவாக உயர்ந்தோர் தாழ்ந்தோரென்று
சிதறுண்டு கிடந்த நம்மை இணைத்தது யார்?
ஆங்கில மொழிஎனும் பாலம்தானே!
அண்ண்ல் காந்தி அம்பேத்கார் நேருமாமா
ஆங்கிலக் கல்வி கற்றே போராடினார்
இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காய்!
வெள்ளையர் வந்தது கொள்ளை அடிக்க
அவர்தந்த ஆங்கிமே மறுமலர்ச்சி தந்தது!
அதன்விளைவே கல்வியும் வளர்ந்திட்டது.
வெள்ளையனும் ஆங்கிலமும வாராதிருந்தால்
எத்தியோப்பியா போல்தான் இந்நாடு இருக்கும்.
அறிவியல் முன்னேற்றம் எல்லாம் கனவாய் இருக்கும்.
சுயநலத்தால் பொருள் சேர்க்க வந்தார்கள்
ஒற்றுமையை நாம்கற்க உதவினார்கள்.
பிரித்தாளும் சூழ்ச்சியைக் கண்டவன் வெள்ளையனா? அவன்வருமுன்னே பலசாதிகளாய் கிடந்ததுயார்?
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் காட்டி
நமைப் பிரித்து வைத்த சூழ்ச்சியைச் செய்தது யார்?
அந்நியர் வருகைக்கு ஊக்கம் மருந்தே
நாம் படைத்த வேற்றுமைதான் வேறொன்றில்லை!
வெள்ளையன் கெட்டதும் நம்மால் தானே.
ஆங்கிலத்தை அவன்நமக்குத் தந்ததால் தான்
வெளிநாட்டில் நம்மவர் பலர் செழித்து வாழ்கிறார்.
பிரிந்து கிடந்த நம்மை எல்லாம் இணைத்தவர்களே
இசுலாமிய மன்னர்களும் ஐரோப்பியருமே.
அதனால் தான் போற்றிடுவேன் அந்நியர்களை
அதைத் தவறு என்பவர்கள் யாரும் இருந்தால்
சொல்லுங்கள் உம்கருத்தை நான்ஏற்பேனே.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (11-Jan-14, 8:44 am)
பார்வை : 213

மேலே