நன்றி பொங்கல்

தைத் திருநாளாம்…
தைத் திங்கள் முதல் நாளாம்….
உழவர் திருநாளாம்…
தைப் பொங்கல்….

தன் வியர்வையை சிந்தி
தன் சகோதர சகோதரிகளுக்கு
அன்னமிடும் அன்னத்தின் கடவுளான
என் விவசாய தோழர்களுக்கு
என் நன்றி….

எந்நேரமும் அயராது ஒளிவீசி
எந்தன் பயிர்களுக்கு உணவளிப்பது மட்டுமின்றி
இவ்வுலகில் உள்ள பல்வேறு இருள்களையும் நீக்கும்
சூரிய பகவானுக்கு
என் நன்றி….

தங்கள் குருதியை தானமிட தயங்கும்
மனமில்லா மனிதர்களிடையில்
தங்கள் குருதியை நமக்கு
உணவாய் மருந்தாய்
தானம் செய்வதோடல்லாமல்
கைம்மாறு எதிர்பாராமல்
தங்கள் உழைப்பையும் நல்கும்
என் விலங்கின நண்பர்களுக்கு
என் நன்றி…

தங்கள் வாழ்க்கையை
பயனுற பிறர் வாழ்வுக்காக
வாழும் நுண்ணுயிர்களுக்கு
என் நன்றி…


தமிழர்களின் நன்றி மறவா பண்பிற்கு
சான்றாய் விளங்கும்
இப்பொங்கல் திருநாளில்
உங்கள் வாழ்வில்
துன்பங்கள் மறைந்து
இன்பங்கள் நிறைந்து
மகிழ்ச்சி பொங்க
வாழ்த்துகள்….

எழுதியவர் : நர்மதா (11-Jan-14, 10:23 am)
Tanglish : nandri pongal
பார்வை : 98

மேலே