போற்றுவோம் தமிழர் திருநாளை

போற்றுவோம் தமிழர் திருநாளை

தமிழர் திருநாளாம்
தைப்பொங்கல் நன்னாளில்
தமிழ்க் கூறும் நல்லுலகெங்கும்
மகிழ்ச்சி பொங்கும்.
பாராண்ட தமிழரின்
பண்பாட்டைப் பாரெங்கும்
சீராகச் சிறப்பாக
கொண்டாடும் பொன்னாள்.
உயர்ந்தவர் தாழ்ந்தவர்
என்றபேதம் இன்றி
எல்லோரும் கொண்டாடும்
சமத்துவத் திருநாள்.
இயற்கை அன்னைக்கு
நன்றி சொல்லும்
இனிய பொங்கல் திருநாள்.
உயிரினங்கள் வாழ்வதற்கு
உணவிடும் பயிரினங்கள்
செழித்தோங்க ஒளிதந்து
மழைதந்து வாழவைக்கும்
செங்கதிரோனைப் போற்றி
பொங்கலிடும் நன்னாள்.
வேளாண்மை சிறந்தோங்க
நெற்றி வியர்வை சிந்தி
உழைக்கின்ற உழவரின்
மேன்மையைப் போற்றும் நாள்.
அவருக்குத் துணையாக
ஏரிழுத்துச் சுமை இழுத்து
உற்ற தோழமையில் சிறந்த
பசுவினத்தைப் போற்றிட
மாட்டுப் பொங்கலினை நாம்
மகிழ்வுடனே கொண்டாடுவோம்.
தித்திக்கும் செங்கரும்பும்
தெவிட்டாத நறுந்தேனும்
எத்திக்கும் மணக்கும்
தீஞ்சுவைப் பழங்களுடன்
பொங்கலிட்டுப் படைத்து
போற்றிடுவோம தமிழர் திருநாளை!

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (11-Jan-14, 6:41 pm)
பார்வை : 161

மேலே