எனக்கே எனக்காக
பரிசுக்காக எழுதவில்லை
பாராட்டுக்காக எழுதவில்லை
பெருமைக்காகவும் எழுதவில்லை
புகழுக்குகாகவும் எழுதவில்லை .
பரிசும் கிடைக்கவில்லை
பாராட்டும் கிடைக்கவில்லை.
பெருமையும் அடையவில்லை
புகழும் அடையவில்லை
மனதில் தோன்றியதை எழுதுகிறேன்
மனதிற் க்கு உவந்ததை எழுதுகிறேன்
மனத்தால் எண்ண ப்படுவதை பகிர்கிறேன்
மனதுக்குள்ளே ஆராய்ந்து பகிர்கிறேன்.
வாசிப்பார் யாருமில்லை
கேட்பவரும் யாருமில்லை
பகிர்ந்ததை விட்டு விடுகிறேன்
ஆராய்ந்ததை மறந்து விடுகிறேன்.
பட்ட அனுபவங்களை எழுதுகிறேன்
படுத்திய அனுபவங்களையும் எழுதிகிறேன்
தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக
தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் .
யார் காதிலும் எ ன் பாட்டு விழுவதில்லை
யார் மனதிலும் என்னுடைய கவி தைகள் பதிவதில்லை
இருந்தும் எழுதுகிறேன் யாருக்காகவும் அல்ல
எழுதி எழுதி நிரப்புகிறேன் எனக்கே எனக்காக,