இணைந்து செல்வோம் சொந்தங்களே

இணைந்து செல்வோம் சொந்தங்களே

இணைந்து செல்வோம் சொந்தங்களே


தமிழே !நம் சுவாசம் 
என்றானதால் தமிழிலே 
வாசம் செய்கிறோம். 

அறிவினில் சிறந்தோர் 
நம் ஆன்றோர் 
அல்லும் பகலும் 
பண்பாட்டை அயராது 
வளர்த்தார் தமிழோடு. 

எந்தையர் நாட்டின் 
வீர இனம் 
சுந்தர தமிழரின் 
நேரிய குணம் 
யாருக்கு வாய்க்கும் 
பாரினில் இம்மனம்? 

அன்பு செலுத்தலால் 
வந்த இழிநிலையா...? 
உரிமைகள் மறுத்து 
வஞ்சகமா.... ? 

பதவி கொடுத்தோம்
பஞ்சம் கொடுத்து
பட்டினி சாவை
திணிக்கின்றனர்
பஞ்சமா பாடகர்கள்..

ஆலம் விதைகள் புதைந்தாலும், 
கி(மு)ளைத்துப் பரவும் 
பல்லுயிர் ஓம்பவே...! 

மாதவம் செய்தேனும் 
ஒன்றாவோம்.பாரினில் 
தமிழினம் பயன்பெறவே. 

அன்புகள் செய்வோம். 
சொந்தங்கள் சொல்வோம். 
உலகத் தமிழினம் 

இணைவோம்
நல் இதயங்களாலே
தமிழ் இணையத்தாலே..!

எழுதியவர் : மின்கவி (11-Jan-14, 3:40 pm)
சேர்த்தது : மின்கவி
பார்வை : 182

மேலே