கவிதை

கருவறை முதல்
கல்லறை வரை
இணையமான வாழ்வின் பாலத்தை
கடந்து போன நாட்களில்
பதிந்து நிற்கும் காட்சிகள்..

மறந்து செல்லும் உறவுகளால்
மடிந்து போகும் இதயங்களின்
மறுபக்கம்...

வந்தமர்ந்த உறவின் கிளையில்
வசந்தமாய் பூத்த
உள்ளங்களின் நெகிழ்வுகள் ..

தான் மட்டும் ரசித்ததை
பிறருக்கு ருசிக்க தரும் நவரசம் ....

வலிகளால் வழியும்
பாடலின் வரிகள் ..

விழி பேசி
இதழ் பேசா
இதயங்களின் மௌன மொழிகள் ...

முப்பொழுதும் கற்பனையில்
சொப்பனம் காணும்
கண்களின் கனவுகள் ,,,

பிரிவிலும்
மனதை தொட்டு தொட்டு
கதைபேசும்
நினைவுகளின் நிழல்கள்...

வாரணத்தின் வரையப்படா
வண்ண ஓவியங்கள்...

பலதரப்பட்ட மூச்சுக்காற்றை
சுவாசித்து
கவிஞால்
ஆவலோடு வளர்க்கப்பட்ட
வார்த்தை மொட்டுக்கள்
துஇர்விடும் மலர்களாக
படிப்போர் நெஞ்சங்களில்
கனவுகளை வார்த்து
வழிந்தோடும் கவிதைகளாக.....

எழுதியவர் : confidentkk (12-Jan-14, 6:25 am)
சேர்த்தது : confidentkk
Tanglish : kavithai
பார்வை : 70

மேலே