விழிகளிலே
தித்திக்கும் வார்த்தைகளை
புதிதாய் சேர்க்க ஆவல் கொண்டேன்
எண்ணத்தில் எதுவும் அகப்படவில்லை...
கண்மூடி தவழவிட்டேன்
சிந்தனையிலே
கண் கண்ட காட்சிகளையெல்லாம்
ஏனோ எதுவும் புலப்படவில்லை ...
வெறும் சொல்லாய் மட்டும் நில்லாமல்
வார்த்தைக்கு அப்பாற்பட்ட
வாழ்க்கையாக வரைய நினைத்தேன்
வந்த வார்த்தைகளோ ஏமாற்றத்தையே தர
எண்ணத்தை மாற்றி மாற்றி
சிந்தித்தும் சிக்காமல்
தாவிக்கொண்டே சென்றது மனது ...
இதயம் தேடிடும் புது ராகம்
மீண்டும் மீண்டும்
தேடலின் தொடக்கபுள்ளியகவே
அமைவதை எண்ணி
மனம் கலங்கி அமர்ந்த வேளையில்
சிரிப்பின் வாசம் காற்றில் நுகர்ந்து
வாசத்தின் வழியில் கண்ணைதிருப்பி
கண்டேன்
கண்சிமிட்டும் பிள்ளை நிலா!
தாயின் கையை விடுத்து
தன்னந்தனியாய் தத்தி தத்தி
நடை பழகும் மழலை
தடுமாறி விழுந்து
தளராமல் மீண்டும் எழுந்து
தொடரும் முயற்சியில்
கற்றுதெளிந்தேன்
வாழ்வின் வேதத்தை ...
விழிகளிலே மலர்ந்த
நம்பிக்கை விழுதுகளால்
புத்துணர்வோடு தொடர்ந்தேன்
புதுமையின் முயற்சியை
வார்த்தை மாற்றத்தில்....

