ஆணுக்கா கரு கொடுப்பான்

பெண் குலம்
கரு அறுக்கும் பேதையே
கொஞ்சம் கூறு.

மீண்டும் நீ
கொன்று குவிக்க
கொஞ்சமேனும் விட்டு வை
பெண் சிசுவை.

ஒருவனுக் கொருத்தி என
படைத்தவன்தான்
சமைத்து வைத்தான்.

சமைத்ததை நீ
ஒழித்து வைத்து
கணக்கில் ஏன் பிழை வைத்தாய்.

பெண்பால்
குரல் கொடுக்க
எம் பாரதி
இல்லை எனும் தைரியமா ?

நாளை உன்
மகனும் எந்த
ஆணுக்கடி கரு கொடுப்பான் ! ? ,

எழுதியவர் : மல்லி மணியன் (12-Jan-14, 11:10 am)
பார்வை : 79

மேலே